1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (12:52 IST)

திருடப் போன ஏடிஎம் மையத்தில் போதையில் மட்டையான திருடன்

கோவையில் திருடன் ஒருவன் ஏடிஎம் மையத்தில் திருட சென்றிருக்கிறான். அவன் குடித்துவிட்டு சென்றதால் ஏடிஎம் மையத்தை உடைத்த பின்னர் போதையில் அங்கேயே தூங்கியுள்ளான்.


 
 
கோவை கவுண்டம்பாளையம் அருகே பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் நேற்று காலை பணம் எடுக்க சென்ற போது அந்த ஏடிஎம் உடைக்கப்படிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
 
காவல் துறையினர் வந்து பார்த்த போது ஏடிஎம் உடைக்கப்பட்டிருந்தது. அங்கு குடிபோதையில் அதை உடைத்த திருடன் தூங்கிக்கொண்டிருந்தான். காவல் துறையினர் திருடனை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
 
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் மணியகாரம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி என்பதும், அவர் ஏடிஎம்-இல் இருந்து பணத்தை திருட ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாகவும், குடி போதையில் இருந்ததால் அங்கேயே தூங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.