வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 அக்டோபர் 2016 (17:05 IST)

’காங்கிரஸ், திமுக செய்த துரோகங்களுக்கு அளவே இல்லை’ - மத்திய அமைச்சர் தாக்கு

காங்கிரஸ், திமுக செய்து உள்ள துரோகங்களுக்கு அளவே கிடையாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “இந்திய எல்லையில் இருந்து நம்மை காக்கும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.
 
காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி துரோகங்களை செய்து உள்ளதாக தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கை திரும்ப பெற்று கொண்டதாக தெரிவித்துள்ளார்.
 
யாரையும் கலந்து பேசாமல் காவிரி விவகாரத்தில் கருணாநிதி தன்னிச்சையாக வழக்கை திரும்ப பெற்றுள்ளது பெரிய துரோகம். இந்த துரோகத்தை தமிழ் சமுதாயத்துக்கு வேறு யாரும் செய்து இருக்க முடியாது.
 
காவிரி பிரச்சினை பற்றி பேச திமுகவுக்கோ, காங்கிரசுக்கோ எந்தவித தகுதியும் இல்லை. தமிழக மக்களுக்கு காங்கிரஸ், திமுக செய்து உள்ள துரோகங்களுக்கு அளவே கிடையாது” என்றார்.