செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (23:31 IST)

கூட்டத்திலிருந்து துரத்தி அனுப்பிய திமுக சேர்மன் வைரலாகும் வீடியோ ?

திமுக வில் இணைந்த உடனே தனியாக அரசியல் செய்கின்றாயா ? உன்னை நாங்கள் (திமுக வினர்) ஏற்றுக்கொள்ளவில்லை என்று திமுக கூட்டத்திலிருந்து துரத்தி அனுப்பிய திமுக சேர்மன் வைரலாகும் வீடியோ ? 
 
அதிமுக விலிருந்து திமுக விற்கு மாறிய ஒன்றிய பெருந்தலைவர் கட்சி மாறியவுடன் உடனே அரசியல் செய்கின்றாயா ? என்று திமுக வினரும், எந்த முகத்தினை வைத்து கொண்டு நீ இங்கே வருகின்றாய் என்றும் அதிமுக வினரும் மாறி, மாறி வார்த்தைகளால் கேட்டு துரத்தி அடித்த வீடியோ காட்சிகளால் பரபரப்பு.
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் கடவூர் செல்வராஜ், இவர் அதிமுக வில் இருந்து ஜெயித்தவர் மற்றும் அதிமுகவில் கடவூர் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்த நிலையில், தற்போது திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, பதவிக்காக ஒரு சிலர் கரூர் மாவட்ட அளவில் கட்சி பொறுப்பிலிருந்தும், கூட்டுறவு பொறுப்பிலிருந்தும், உள்ளாட்சி பிரதிநிதி பொறுப்பிலிருந்தும் சென்றுள்ளனர். இந்நிலையில், அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் பதவி வகித்து திமுக வில் இணைந்த பின்பு முதன்முதலாக திமுக அறிமுக கூட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட  சேர்வைக்காரன்பட்டி, கடவூர் ஆகிய பகுதியில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக ஒன்றிய செயலாளர் சுதாகர், அனுமதி இல்லாமல் எப்படி நீ மட்டும் தனியாக வரலாம், நாங்கள் ஒன்றுபட்ட திமுக வில் குழப்பத்தினை ஏற்படுத்த நினைக்கின்றாயா ? கட்சியில் நீ இணைந்தால் முதலில் கட்சியில் சேர்ந்த உடனே கழகத்தினை ஏற்படுத்த நினைக்கின்றாயா ? ஒன்றிய செயலாளர் இல்லாமல் எப்படி கிளை செயலாளர்களை சந்திக்கின்றாய் என்றும் திமுக வினர் ஒரு புறமும், கடவூர் ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர் என்பவர் இல்லாமல் நீங்கள் மட்டும் எப்படி கட்சி நிகழ்ச்சிக்கு வரலாம் என்றும், கட்சித்தொண்டர்களை நீங்கள் மட்டும் எப்படி தனியாக சந்திக்கலாம், என்றும் வினா எழுப்பினார். இந்நிலையில், அதிமுக வினரும், பொதுமக்களும் ஊருக்குள் வரக்கூடாது என்றும் அதிமுக வில் ஜெயித்து விட்டு திமுக வில் திடீரென்று போய் சேர்ந்த நீங்கள் ஒன்றும் எங்களுக்கு ஒன்று செய்ய வேண்டாம் என்றும் பதவி சுகத்திற்காக நீங்கள் திமுக வினை நாடியுள்ளீர்கள், பொதுமக்களிடம் ஏதாவது கேட்டீர்களா ? வாக்குகள் வாங்கும் போது மட்டும் அதிமுக சின்னம், அம்மா வின் கோட்டை என்று கூறி வாக்குகள் வாங்கி பின்பு எப்படி எந்த முகத்தினை வைத்து கொண்டு திமுக நிகழ்ச்சிக்கு அதுவும் அந்த கட்சியின் உண்மையான ஒன்றிய செயலாளர் சுதாகர் என்பவர் இல்லாமல் நீங்கள் மட்டும் அரசியல் செய்கின்றீர்களா ? என்று வினா எழுப்பியதோடு அந்த வாகனத்தினை துரத்தியடித்தனர். இந்த சம்பவத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.