ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (10:43 IST)

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Gold
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,860-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும்,  பார் வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.