ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (16:00 IST)

துணை முதல்வர் பதவி வதந்தியே - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக்  கைப்பற்றிய நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஆட்சி நடந்தி வருகிறார்.

இத்தேர்தலில், சென்னை-சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார்.

சினிமாவில் நடிப்பதுடன் , தயாரிப்பில் ஈடுபட்டு வந்த உதயநிதி,   அதிலிருந்து  விலகி, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சமீபத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட இருப்பதாக உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

''உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தியே. என் உடல் நிலை குறித்து பொய் தகவல்களை பரப்பினர். அந்த பொய் உடைந்து  நொறுங்கியதால் துணை முதல்வர் பதவி வசந்தி பரப்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம் என பதிலடி கொடுத்து வதந்தி பரப்பியோரின் வாயை உடைத்துவிட்டார் உதயநிதி. திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்பும் முயற்சிக்கு கட்சியினர் இடம் கொடுக்க வேண்டாம்'' என்று விமர்சித்துள்ளார்.