ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (15:29 IST)

வாடகை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி பூட்டிவிட்டு சென்று ஓனர் - குடும்பமே நடுரோட்டுக்கு வந்த அவலம்!

3 மாதமாக உடை மற்றும் ஆவணமின்றி உறவினர் வீட்டிலயே தங்கியிருப்பதாக கூறி வேதனை .
 
 
மதுரை எஸ்எம்பி காலனி பகுதியை சேர்ந்த முத்துபாண்டி - மீனா தம்பதியினர் மற்றும் முத்துபாண்டியின் தாய் காளியம்மாள் ஆகிய மூவரும் மதுரை அண்ணாநகர் மௌலானா சாகிப்தெரு பகுதியில் உள்ள கணேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து மாதம் 10ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு குடியேறி வசித்துவந்தாக முத்துபாண்டி தரப்பில் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக வீட்டீனுள் உள்ளே இருந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்து காளியம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காளியம்மாளின் சிகிச்சைக்காக 10ஆயிரம் ரூபாய் வீட்டின் உரிமையாளர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது
 
இதனை தொடர்ந்து வீட்டினை காலி செய்ய வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கூறியதையடுத்து சில நாட்கள் கழித்து வீட்டை காலி செய்துகொடுப்பதாக கூறியதோடு திடிரென ஏன் என வீட்டை காலி பண்ண அவசரபடுத்துகிறீர்கள் என முத்துபாண்டியின் மனைவி மீனா வீட்டின் உரிமையாளரிடம் தொலைபேசி மூலமாக கேட்டதாகவும், இந்நிலையில் வீட்டு உரிமையாளரின் உறவினர் சிலர் தாக்கியுள்ளதாக மீனா அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். 
 
இதனிடையே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் என்பதால் அடிக்கடி தூய்மை பணிக்கான உபகரணங்களை எடுத்துவருவதாக காரணத்தை கூறி வீட்டினை உள்ளே இருந்த ஆடைகள், வீட்டு சாமான்கள், மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளே வைத்துவிட்டு மூன்று பூட்டுகளை பூட்டிவிட்டு உரிமையாளர் சென்றுவிட்டதாக கூறி காவல்நிலைத்திலும் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 3 மாதங்கள் ஆகியும் வீட்டினுள் இருந்த பொருட்களை எடுக்க முடியாத நிலையில் முத்துபாண்டி உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்பதோடு மாற்று உடைகள் கூட இல்லாமலும் , ஆவணங்கள் இல்லாத நிலையில் குழந்தையின் படிப்பும் தொடர முடியவில்லை என கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்துள்ளனர் 
 
ஆனால் இதுவரையும் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் இன்று வீட்டு வாசலிலயே காத்திருக்கின்றனர்.
 
இது குறித்து வீட்டு உரிமையாளர் தரப்பில் : முத்துபாண்டி தனது வீட்டிற்கு தொடர்ச்சியாக வாடகை செலுத்த முடியவில்லை என கூறியதாகவும் அவர்களே வீட்டை காலி செய்வதாக கூறிவிட்டு தாமதபடுத்தியதாகவும், மேலும் வீட்டை காலி செய்ய பணம் வேண்டும் என கேட்டதாகவும் அதனால் மட்டுமே வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக விளக்கம் அளித்தார். வீட்டை காலி செய்ய வலியுறுத்தி தூய்மை பணியாளரின் வாடகைக்கு இருந்த வீட்டை பொருட்களை எடுக்க விடாமல் பூட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது