கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்.. எம்.ஜி.ஆர். பிறந்த த.வெ.க. தலைவர் விஜய் பதிவு..!
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எம்ஜிஆர் பிறந்த நாள் குறித்த பதிவை அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுகவின் நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் இன்று தமிழக முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் மட்டும் இன்றி மக்களும் எம் ஜி ஆர் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பல அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் பதிவு செய்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இது குறித்து ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்
Edited by Mahendran