1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (15:10 IST)

தந்தை இறந்தது தெரியாமல் பிணத்துடன் இருந்த மனநலம் பாதித்த மகன்! – மதுரையில் சோகம்!

Death
மதுரை வில்லாபுரம் அருகில் மீனாட்சி நகர் 1வது தெருவில்  வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்தவர் ஜெகதீசன்  ( 74) இவர் ஒரு ஜோதிட பேராசிரியர் சம்ஸ்க்ருத பண்டிட் ஆவார் இவர் MA.,(ஜோதிடம்) M.phil. படித்துள்ளார்.



இவருக்கு கார்த்திக் சீனிவாசன்( வயது40) என்ற மகனும் ஷர்மிளா (வயது 44) ஒரு மகளும் உள்ளனர் மகள் திருமணம் ஆகி கணவர் சிவ குமாருடன் வில்லாபுரம் வைகை குடியிருப்பு வீடுகளில் வசித்து வருகிறார்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த தந்தை ஜெகதீசனுக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் கார்த்திக் சீனிவாசனுக்கும் உணவு அளித்து வந்துள்ளார் .

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 10ம் தேதி ஞாயிறு கிழமை தனது தந்தையை பார்த்துள்ளார்  அதன் பின்பு பார்க்கவில்லை என்று தெரிவிக்கிறார்.மேலும் இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு கடைகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் அந்த கடை நடத்துபவர்கள் மேல் வீட்டில் துர்நாற்றம் வீசுவதை கண்டு மேலே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்த ஜெகதீசன் உடல் அருகே மகன் தியான நிலையில் அமர்ந்திருந்தது அதிர்ச்சி அளித்தது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஜெகதீசன் இறந்து உடல் ஊதி இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து மூன்று நாட்களாகிய நிலையில் இருந்த தந்தையுடன் மூன்று நாள் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் வாழ்ந்து வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து  அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஜோதிடர் ஜெகதீசனின் உடலை உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.