ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2017 (20:58 IST)

நாளை முதல் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவை எவை தெரியுமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பொறுப்பை ஏற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன் தலைமைச்செயலகத்திற்கு சென்று போட்ட முதல் கையெழுத்து 500 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கையெழுத்துதான்



ஆனால் எதிர்க்கட்சிகள் இது வெறும் அறிவிப்பு என்றும் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என்றும் சவால் விட்டன.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் குறித்த விபரங்களை அறிவித்துள்ளது. இதன்படி  சென்னை மண்டலத்தில் 105 டாஸ்மாக் மற்றும் 63 மதுக்கூடங்கள் மூடப்படுகின்றன. கோவை மண்டலத்தில் 44 டாஸ்மாக் கடைகள் 20 பார்கள் மூடப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் 99 டாஸ்மாக் கடைகள் 37 பார்கள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடியாக மாற்றுப்பணி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.