திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (09:38 IST)

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தை சுட்டெரிக்க போகும் வெயில்! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மார்ச் முடிவை நெருங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயில் உஷ்ணம் அதிகரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை உயர்வு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4 நாட்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது சில பகுதியில் சௌக்ரயமற்ற சூழல் நிலவலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மேகமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சம் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K