1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (19:21 IST)

அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகின்றது : செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகின்றதே தவிர நிவாரணப்பணிகளில் அரசு மெத்தன போக்கினை காண்பிக்கின்றது – உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிந்திருந்தால் கூட உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள் - கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டி.
கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களுக்கு நிவாரணப்பணிகளை அனுப்பும் பணிகள் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில், பாய்கள், 5 கிலோ அரிசி சுமார் 5 ஆயிரம் பேக்குகள், வேஷ்டி, சட்டை, தண்ணீர் பாட்டில்கள் என்று சுமார் 7 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
பின்னர் அவர் கூறியதாவது:
 
தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கொடுக்கின்றோம் என்று மத்திய அரசு தமிழக அரசு ஒரு கண் துடைப்பிற்காகவும், வெற்று அறிக்கைகள் மூலமாகவே, செயல்பட்டு வருகின்றது. 
 
மேலும், புயல் பாதித்த இடங்களில் எந்த ஒரு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், அரசு தவிக்கின்றது. ஆகவே மக்கள் தக்க பாடத்தினை தேர்தல் நேரத்தில் வெளிக்கொணர்வார்கள். 
 
மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வும் தமிழக அரசினை பாராட்டியுள்ளார்களே என்று கேள்வி கேட்டதற்கு., புயல் வருவதற்கு முன்னர் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், ஆனால், தற்போது., புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகள் மெத்தனம் காண்பிப்பதாகவும் கூறினார். 
 
மேலும் ஒருவேளை, உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கூட புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு பயப்படும் இந்த எடப்பாடி அரசு நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

சி.ஆனந்தகுமார்