குழந்தைகள் ஆங்கிலம் பயில எளிய வழி

குழந்தைகள் ஆங்கிலம் பயில எளிய வழி


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 31 மே 2016 (16:16 IST)
பள்ளி செல்லும் குழந்தைகள் ஆங்கிலம் எளிய வழியில் கற்க ஆங்கில நாளிதழ்கள் படிக்க வேண்டும் என பிரபல கல்வியாளர் ஆலோசனை கூறுகிறார்.
 
 
இது குறித்து, பிரபல கல்வியாளர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்,  இன்றைய நிலையில் பல ஆயிரங்களை கொட்டி யூகேஜி, பர்ஸ்ட் கிளாஸ் சேர்க்க வேண்டி இருக்கு. அதுமட்டுமா? ஷூ, டை, பெல்ட். லஞ்ச் பாக்ஸ் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
 
ஆனால், குழந்தைகள் ஆங்கிலத்தை எழுத்துக்களை கூட்டி படிக்கும் நிலை. இதனால், ஆரம்த்தில் இருந்தே ஆங்கில  வார்த்தைகளை கூட்டி மளமள என படிக்கும் திறனை வளர்க்க கூடிய பேப்பர் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு, மாதம் வெறும் ரூ 300 மட்டுமே செலவு ஆகும்.
 
எனவே, முதல் இரண்டு மாதங்கள், பேப்பரில் வரும் விளம்பரங்கள், சினிமா விளம்பரங்களை மட்டுமே குழந்தைகள் ஆர்வமாக பார்க்கும். அப்படியே படிப்படியாக ஆர்வத்தில் செய்திகளை படிக்க துவங்கிவிடும். அனைத்திலும் தடங்கல் இன்றி படிக்கும். 
வ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு ஆறே மாதங்களில் மொழித்திறனில் புலமை பெற்று நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்.
 


இதில் மேலும் படிக்கவும் :