வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (18:04 IST)

இந்திய ஆட்சிப் பணி விதி எண் 6-ல் திருத்தம் செய்யும் முடிவை கைவிட செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதி எண் 6 -ல்  திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக்  கைவிட வேண்டும் என மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சட்ட நடைமுறைப்படி மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎஃ எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு அழைக்க விரும்பும் பட்சத்தில் அதற்கு மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது. ஆனால்,மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தத்தின்படி, மாநில அரசின் அனுமதியின்றி அதிகாரிகளை மாற்றிவிட முடியும்.இது குடிமைப்பணி அதிகாரிகளுக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.