செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2025 (15:27 IST)

முடிவுக்கு வந்த முரண்பாடு! ராமதாஸுடன் பொங்கலை கொண்டாடிய அன்புமணி!

PMK Ramadoss

பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே ஏற்பட்ட முரண்பாடு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

 

 

பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவிய ராமதாஸின் மகனான அன்புமணி தற்போது அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பாமக கூட்டத்தில் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி மேடையிலேயே மறுப்பு தெரிவித்ததும், தொடர்ந்து ராமதாஸ் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் கட்சிக்குள் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்பட்ட நிலையில், முகுந்தனை நியமிப்பதில் ராமதாஸ் பிடிவாதமாக இருந்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஆனாலும் பாமகவில் இதுபோன்ற வாக்குவாதங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றே என அன்புமணி பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில் அன்புமணி தனது தந்தை ராமதாஸ் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கலை கொண்டாடியுள்ளார். அவர்களது குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர்களுக்கிடையேயான முரண்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாக பாமகவினர் நிம்மதியடைந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K