அண்ணா உயிரியல் பூங்காவில் வங்கப்புலியின் உடல் நிலை கவலைக்கிடம்...
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், மருத்துவர்கள் குழுவினரால் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
செங்கல்பட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 21 வயது வங்கப்புலி விஜயனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இரத்த மதிப்பீடு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே பூங்கா வன உயிரின மருத்துவக் குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.