'' நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தினருக்கு லூஸ்மோசன்...பிரபல ஓட்டல் மீது புகார்
வண்டலூர் அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில் இயங்கி வருகிறது பிரபல தனியார் ஓட்டல். இங்கு சாப்பிட்ட ஒரு குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 2 மகள்களுடன், வண்டலூர் அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு கடந்த 13 ஆம் தேதி அன்று உணவு சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளனர்.
அங்கு சிக்கன் நூடுல்ஸ் மற்றும் கிரில் சிக்கனை ஆர்டர் செய்து எல்லோரும் சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு, மோகன் மற்றும் அவரது இரு மகள்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடும் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எல்லோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோகனின் மனைவிக்கு உடல்நிலை சரியான நிலையில், ''மற்ற மூவருக்கும் இன்னும் உடல் நிலை சரியாகவில்லை என்றும் சிகிச்சை செலவுக்குப் பணமில்லை இதுகுறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது