செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (18:37 IST)

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்.. பக்தர்கள் அதிர்ச்சி..!

மேல்மருவத்தூர் ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
82 வயதுடைய பங்காரு அடிகளார் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.  
 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில்  பெண்கள் பூஜை நடத்தலாம் என்ற புரட்சியை 35 ஆண்டுகளுக்கு முன்னரே செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீக பணிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். 
 
அம்மா என்று அவர் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.  சித்தர் பீடம் கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளும் இவர் செய்து உள்ளார். பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டிய அவருக்கு மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.  
 
உலகின் 15 நாடுகளில் பங்காரு அடிகள் அவர்களின் பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் பங்காரு அடிகளார் அவர்களின் மறைவிற்கு  அரசியல்வாதிகள் ஆன்மீகவாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran