1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:16 IST)

தந்தி டீவி வாகனத்தை விரட்டியடித்த பொதுமக்கள்: அலங்காநல்லூரில் பரபரப்பு-வீடியோ

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் நேற்று தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட மாணவர்கள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு முழுவதும் இந்த போராட்டம் நீடித்தது. இதனையடுத்து அவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக அடித்து கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் சென்னை மெரினாவில் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

இந்த போராட்டத்தை எந்தவித அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல் பொதுமக்களாக வெகுண்டெழுந்து நடத்துகின்றனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் அலங்காநல்லூர் சென்று தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அலங்கா நல்லூர் போரட்டம் குறித்து சில சேனல்களை தவிர மற்ற தமிழக செய்தி சேனல்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில்  அலங்கா நல்லூரில் போராட்டத்தை படம்பிடிக்க சென்ற தந்தி தொலைக்காட்சி வாகனத்தை மறித்த பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்கூறி அங்கிருந்து வெளியேற்றின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.