1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2016 (01:58 IST)

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ: பொதுமக்கள் அவதி

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்து புகை மண்டலமானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.  


 

 
தஞ்சை மாநகராட்சி மாநகராட்சி குப்பைக் கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காற்று அதிக அளவில் அடிக்கவே தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதில் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
 
குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதை தடுக்க அங்கு கொட்டப்படும் குப்பைகளை முதலில் மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கும் குப்பைகளை விற்பனை செய்ய முடியும். மக்காத குப்பைகள் மலை போல் குவியாமல் தடுக்கவும் முடியும்.
 
இது முதல் கட்ட பணியாக இருந்தாலும் மாநகர எல்லைக்குள் இருக்கும் குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.