கருணாநிதி நினைத்திருந்தால் காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்க முடியாதா?: தம்பித்துரை கடும் தாக்கு
கருணாநிதி நினைத்திருந்தால் காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்க முடியாதா ? முதன் முதலில் 1974 ஆம் ஆண்டு அவரது காலத்தில் தானே இந்த பிரச்சினை உருவானது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கேள்வி எழுப்பினார். கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு பேசினார். மேலும் அவர் பேசியதாவது:-
கருணாநிதி நினைத்திருந்தால் காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்க முடியாதா ? முதன் முதலில் 1974 ஆம் ஆண்டு அவரது காலத்தில் தானே இந்த பிரச்சினை உருவானது. அந்த பிரச்சினையை தீர்க்காமல், அப்போதைய சர்க்காரிய கமிஷன் ஊழலில் இருந்து தப்பிக்க தான் அவர் முயற்சித்தாரே தவிர, தமிழக மக்களை பற்றி கவலைப்பட வில்லை. தஞ்சாவூரை பற்றி கவலைப்பட வில்லை, தமிழர்கள் தாக்கப்படுகின்றனரே ! அதற்கு கண்டனம் தெரிவிக்கும் தெம்பு உள்ளதா ? ஏன் முடியாது காரணம் அவரது மகள் செல்வியின் எஸ்டேட் அங்குள்ளது. சன் தொலைக்காட்சியின் உதயா தொலைக்காட்சி அங்குள்ளது.
இதே கருணாநிதி முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டபோது, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று கர்நாடகா மாநிலத்தில் கைது செய்ய துடிப்பவர் கருணாநிதி. ஏன், பா.ம.க ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இராமதாசு காவிரி பிரச்சினையை தீர்க்க அக்கறை இல்லை, அதுமட்டுமின்றி தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லை என்றார்.
கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திரைப்பட நடிகர் ராமராஜன், இந்திய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.