ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (07:45 IST)

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் புத்தாண்டு மீண்டும் மாற்றப்படும்: கனிமொழி எம்பி

அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் பொழுது தமிழ் புத்தாண்டு தினமும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம் 
 
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தை 1-ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்றும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் காலம் காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று திநகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக எம்பி கனிமொழி அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 11ஆம் தேதிதான் புத்தாண்டு என அறிவிக்கப்படும் என்று கூறினார் 
 
பொங்கல் மற்றும் தை முதல் தேதி புத்தாண்டு என்பது நம்முடைய சுயமரியாதை உரிமை என்றும் அதை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் இதனை தமிழ் புத்தாண்டு தினமாக தை1ம் தேதி அறிவித்தபடியே தளபதி அவர்கள் முதல்வரான பின்னர் அதை அமல்படுத்துவார் என்றும் திமுக விரைவில் ஆட்சிக்கு வந்தவுடன் தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கப்படும் என்றும் கனிமொழி கூறினார். அவர் தெரிவித்த கருத்துக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் நெட்டிசன்கள் இடையே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது