1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 மே 2015 (10:32 IST)

கோவில் கலைநிகழ்ச்சியில் தலித் மாணவர்களுக்கு தடை

நாகை அருகே கோயில் திருவிழாவின் போது, கலைநிகழ்ச்சிகளில் தலித் மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செட்டிப்புலத்தில் மழைமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த மழைமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு, நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
 
இந்த ஆண்டும் வழக்கம் போல், பள்ளி மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடத்த தலித் மாணவர்கள் சிலர் தயாராக வந்தனர்.
 
ஆனால், கலைநிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்கள், தலித் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுத்துவிட்டனர். மேலும், தலித் மக்கள் அந்தக் கோயிலிக்குள் சென்று வழிபாடு செய்ய முடியாத நிலைமையும் உள்ளதாக கூறப்படுகின்றது.
 
இந்த சம்பவத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.
 
கோவில் கலைநிகழ்ச்சியில் தலித் மாணவர்களுக்கு தடை கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.