1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (01:35 IST)

திருமணம் செய்வதாக உறுதியளித்ததால் உடலுறவு கொண்டேன்: திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

திருமணம் செய்வதாக உறுதியளித்ததால் உடலுறவு கொண்டேன்: திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

திருச்சியில் இளம்பெண் ஒருவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து அவருடன் உடலுறவு கொண்ட நபர், பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றபோது காதலித்த பெண் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.


 
 
திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த மணிகண்ட சங்கரின் என்பவரின் திருமணத்தன்று ஜுனத் என்ற இளம்பெண், போலீசில் புகார் செய்து அவரது திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
 
ஜூனத், அளித்த புகாரில், தானும், மணிகண்ட சங்கரும் கடந்த 6 ஆண்டாகளாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாக உறுதியளித்தார். இதனால் அவருடன் பலமுறை உடலுறவு கொண்டேன்.
 
ஆனால் மணிகண்ட சங்கர் தன் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ள பெண்ண திருமணம் செய்வதாக அறிந்தேன், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
 
இளம்பெண்ணின் இந்த பகீர் புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் திருமண மண்டபத்தில் மணமகனாக இருந்த மணிகண்ட சங்கரை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.