1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (15:04 IST)

6-வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி

6-வது மாடியில் இருந்து  தவிறி கீழே விழுந்து இளம்பெண் பலியாகி உள்ளார்.


 
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் மாணிக்க வாசகத்தின் மகள் கங்காதேவி (23). சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம்பட்டி பகுதியில் உள்ள பென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும், அவர் அந்த நிறுவனத்தின் வளாகத்திலேயே அடுக்கு மாடி குடியிருப்பில் 6 - வது மாடியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை, 6 - வது மாடியில் நின்று கொண்டு இருந்த கங்கா தேவி திடீரென தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே கங்காதேவி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அந்த குடியிருப்பில் வசித்தவர்கள், இதுகுறித்து கோவில் பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் கங்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கங்காதேவி செல்போன் பேசும் போது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தாரா? அல்லது யாரவது அவரை தள்ளிவிட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.