4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு காலில் சூடத்தால் சூடு வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் வைஜெயந்தி மாலா. இவர் 4-ஆம் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் சரியாக படிக்காததால் அவர்களுடைய காலில் கற்பூரத்தால் சூடு வைத்துள்ளார். இதனால் மாணவர்களின் காலில் தீ காயம் ஏற்பட்டது.
வீட்டிற்கு சென்ற மாணவர்களின் காலை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் காலில் சூடு வைத்த ஆசிரியரையும், பள்ளியயும் கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி ஆசிரியர் வைஜெயந்தி மாலா மீது தவறு இருப்பது தெரிந்ததும் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தை கண்டிக்காத பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.