விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது

K.N.Vadivel| Last Updated: புதன், 5 ஆகஸ்ட் 2015 (05:49 IST)
விருத்தாசலத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையை “மக்கள் அதிகாரம்” அமைப்பின் சார்பில் அடித்து நொறுக்கப்பட்டது.
 


கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், பள்ளிக் கூடம், சந்தை, மாவட்ட கல்வித் துறை அலுவலகம் முதலான இடங்கள் உள்ள மையமான பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
 
இந்தக் கடையை மாற்ற வேண்டும் என்று அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக அமைப்புகளும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை.
 
இந்த நிலையில், அந்த டாஸ்மாக் கடைக்குள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கதிர்வேல் தலைமையில் ஒரு படை உள்ளே புகுந்தனர். அவர்கள், அங்கிருந்த மது பாட்டில்களைப் பெட்டியுடன் கடைக்கு வெளியே கொண்டு வந்து, கடை முன்பு போட்டு உடைத்தனர்.
 
இந்த தகவல் அறிந்த டி.எஸ்.பி. கார்த்திகேயன், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மதுபாட்டில்களை உடை 6 பேரை கைது செய்தனர்.
 
தமிழகம் முழுக்க மதுவிலக்கை அமுல்படுத்த கோரி, பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையை மக்களும், அரசியல் கட்சிகளும் அடித்து நொறுக்கி வரும் நிலையில், விருத்தாசலத்தில், டாஸ்மாக் கடை சூறையாடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :