1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 10 டிசம்பர் 2018 (17:05 IST)

வேளாளர் மரபியல் பிரச்சினை குவிந்த மனுக்களால் பரபரப்பு !

சாதிக்கலவரத்தினை தூண்டும் தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், தமிழக முதல்வரின் பெயரையையும், ஆட்சிக்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்தும் விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநிலத்தலைவர் கார்வேந்தன் கரூரில் பேட்டி அளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநிலத்தலைவர் த.கார்வேந்தன் தலைமையில், அகில இந்திய வ.உ.சி.பேரவை, வ.உ.சி பேரவை, அனைத்து வேளாளர் பேரவை சார்பில் அதன் நிர்வாகி மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

வேளாளர் மரபியல் பிரச்சினைக்கு ஏற்கனவே மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம், தெரிவிக்கையில், ஏற்கனவே மத்திய அரசும், மாநில அரசும், வேளாளர்கள் பட்டியலில், சோழிய வேளாளர், சைவ வேளாளர், கார்காத்த வேளாளர், கொங்கு வேளாளர் போன்ற ஏழு பிரிவுகள் அடங்கியவைகள் ஒரே கலாச்சாரமாகவும், தொப்புள் கொடி உறவுகள் போல பழகி வருவதாகவும்,



இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டத்தினை, நாங்கள் கொடுக்க முடியாது பலமுறை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்திய நிலையில், அரசே அது குறித்து அறிவிக்கும் நிலையில், அதற்கு முன்பாக ஒரு சில தேவேந்திர குலத்தினை சார்ந்த தலைவர்களான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஆகியோர் எங்கள் அந்த ஏழு பிரிவுகளின் சமூகத்தினை தூண்டும் வகையிலும், ஜாதிப்பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்திலும் பேசி வருவதாகவும்,  ஜாதிப்பிரச்சினையை தூண்டும் இது போல துரோகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனுக்கள் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். பேட்டியின் போது, வ.உ.சி பேரவை நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

சி.ஆனந்தகுமார்