செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (09:23 IST)

மக்கள் தரும் ஒத்துழைப்பை பொருத்துதான் முழு ஊரடங்கு?? – சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை உள்ள சூழலில் மக்களின் ஒத்துழைப்பை பொறுத்தே முழு ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கொரோனா முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற வகையில் மக்களிடையே பேச்சு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தரும் ஆதரவை பொறுத்துதான் முழு ஊரடங்கு குறித்த முடிவை சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.