1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (10:47 IST)

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை ஒத்திவைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளை இணைக்கும் வகையில் “ஒரே நாடு ஒரே ரேசன்” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள எந்தவொரு ரேசன் கடையிலும் மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் பல மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில் தமிழகமும் இணைந்துள்ளது.

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிவாரண தொகை மற்றும் இலவச ரேசன் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் “ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டம் ஏப்ரலில் செயல்படுத்தப்படாது, கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.