வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (10:03 IST)

கொரோனா பாதிப்பும் இல்ல.. நோயாளியும் இல்ல..! – மொத்தமாக மீண்ட அரியலூர், மயிலாடுதுறை!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து மொத்தமாக மீண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. தமிழகத்திலும் தினசரி பாதிப்புகள் 147 ஆக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேருக்கும், கோவையில் 17 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அரியலூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதில் அரியலூர் மற்றும் மயிலாடுதுறையில் புதிய பாதிப்புகள் யாருக்கும் ஏற்படாத நிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சையில் இருந்தோரும் குணமாகி உள்ளதால் முற்றிலுமாக கொரோனா இல்லாத மாவட்டங்களாக இவை மாறியுள்ளன.