திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (22:52 IST)

உக்ரைன் மக்களை சந்தித்த முன்னணி நடிகை..வைரல் புகைப்படம்

priyanka chopra
முன்னாள் உலக அழகியும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையுமான பிரியங்கா சோப்ரா உக்ரைன் மக்களை சந்தித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம்  ஆண்டு தன்னை விட வயதில் இளையவரான நிக் ஜோன்சை சந்திந்த பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.

தற்போது யுனிசெப் அமைப்பின்  நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், உக்ரைன், ரஷ்யா இடையே 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போரில் உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என பிரியங்கா சோப்ரா குரல் கொடுத்துள்ளார்.

மேலும், உக்ரைன் மக்கள் தற்போது போலந்திற்கு அகதிகளாகச் சென்று வரும் நிலையில் அவர்களை  நேரில் சந்தித்துள்ளார். அவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்கள் பற்றி பதிவிட்டுள்ளார்.