திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (08:54 IST)

தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று: விபரங்கள் தெரிந்துகொள்ள வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் காலை 11 மணிக்கு நிதியமைச்சரும், அவை முன்னவருமான பன்னீர் செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.


 
 
பின்னர், பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும்.
 
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசின் இந்த ஆட்சியில் தாக்கல் செய்ய இருக்கும் முதல் நிதிநிலை அறிக்கை இது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.