ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (11:11 IST)

வதந்தி பரப்புனா மட்டும்தான் கைது; கிண்டல் பண்ணுனா பிரச்சினை இல்ல! – மத்திய அரசு விளக்கம்!

கொரோனா பற்றிய வதந்திகள் மற்றும் கிண்டல் பதிவுகளை இடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதார அமைச்சகங்கள் விளக்கங்கள் அளித்து வருகின்றன.

ஆனாலும் சமூக வலைதளங்களில் கொரோனா மருந்து போன்ற போலியான செய்திகள், வதந்திகள் வீடியோக்களாகவும் வேகமாக பரவி வருகின்றன. நிரூபிக்கப்படாத போலி தகவல்களை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் கொரோனாவை கேலியாக சித்தரித்து கார்ட்டூன் வரைதல், கிண்டல் பதிவுகளை இடுதல் போன்றவற்றை செய்தாலும் கைது நடவடிக்கை என சமூக வலைதளங்களில் திடீர் செய்தி பரவியது. ஆனால் போலி தகவல்களை பரப்புதலுக்கு மட்டுமே கைது, கிண்டல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கவில்லை என மத்திய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.