1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (15:22 IST)

தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை வருகை.. திடீர் சந்திப்பு ஏன்?

முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளதாக தகவல் வெளியானது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை அழைத்து அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. 
 
ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கம் அளித்த போது அமித்ஷா தனக்கு சில அறிவுரைகள் கூறியதாகவும் மிரட்டவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
 
முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜக வேட்பாளராகவும் களமிறங்கிய தமிழிசையுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு நடந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை வருகை தந்ததாகவும் இருவரும் மனம்விட்டு சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva