வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (12:34 IST)

அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் தீவிரவாதிகள்; மறைமுகமாக சாடும் தமிழிசை

அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் தீவிரவாதிகள்; மறைமுகமாக சாடும் தமிழிசை
கதிராமங்கலம் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிட்டதாக தமிழிசை கூறியுள்ளார்.


 

 
கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுத்ததாக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசையிடம் கேட்கப்பட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
மாநில பாதுகப்புக்காக யரையாவது கைது செய்தால் அதை எதிர்ப்பதே எதிர்கட்சிகளின் வேலை. மாணவர்கள் போராட்டத்தில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டது என்றார்.
 
இவரது இந்த கருத்து போராட்டக்காரர்களை கொச்சை படுத்தும் விதமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு போராடிய போது இதே கருத்தை தான் மாநிலம் மற்றும் மத்திய அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழிசையும் இதே கருத்தை கூறியுள்ளார். இதன்மூலம் இவர்கள் அரசு எதிராக போராடுபவர்களை தீவிரவாத அமைப்பினர் என்று மறைமுகமாக கூறி வருகின்றனர்.