செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (16:56 IST)

இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்போறாங்க; மலேசியா சென்ற தமிழக இளைஞர் கதறல்

மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழக இளைஞர் ஒருவர், தன்னை இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்போவதாக கதறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வேலைக்காக மலேசியாவுக்கு சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்காக மலேசியாவுக்கு சென்றுள்ளார். செல்வம் என்பவர் அவரை ஹோட்டலில் பணியாற்ற அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உணவு கொடுக்காமல், ஊதியம் வழங்காமல் கொத்தடிமை போல் நடத்தியுள்ளனர். இதை கேட்ட அந்த நபருக்கு அடி, உதை விழுந்துள்ளது. 
 
அவர்களிடம் தப்பி சென்று பூங்காவில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கூலிப்படையினர் தன்னை இன்னும் சிறிது நேரத்தில் கொல்லவுள்ளதாக கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் தான் கொல்லப்படுவது உறுதி என்பதால் அதற்கு காரணம் அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற செல்வம்தான் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
தற்போது இந்த நபரை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.