வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 27 பிப்ரவரி 2016 (15:37 IST)

விஜயகாந்த் கிங் ஆவதை விட ஜெயலலிதா குயின் ஆவதே நல்லது : தமிழருவி மணியன் தாக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங் ஆவதை விட தமிழக முதல்வர் ஜெயலலிதா குயின் ஆக தொடர்வதே நல்லது என்று காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர் தமிழருவி மணியன். இவர்தான் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் நேரில் சென்று பேசி அந்த கூட்டணியை உருவாக்கினார்.
 
இந்த சட்டமன்ற தேர்தலிலும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பில் 25 பேர் போட்டியிடுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் திடீரென தனது ஆதரவை மக்கள் நல கூட்டணிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயம், அந்த கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் ஏற்கலாம். ஆனால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அது ஏன் என்பதற்கான பதிலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
 
அவர் கூறும்போது “விஜயகாந்த் இந்த கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது என்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், குடும்ப அரசியல், கட்அவுட் கலாச்சாரம், தனி மனித துதி என்று திமுக, அதிமுகவுக்கு கொஞ்சமும் வித்தியாசம் இல்லாததுதான் தேமுதிக. 
 
எனவே விஜயகாந்த் கிங் ஆவதை விட, ஜெயலலிதா குயின் ஆக தொடர்வதே  நல்லது “ என்று அவர் கூறினார்.