1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil ndu government says about reservation

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்த படாது: தமிழ்நாடு அரசு

TN assembly
உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
 
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து வேறுபட்டு உள்ளன
 
ஏற்கனவே மேற்குவங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் 10 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் சாதி ஏழைகளுக்கு அமல்படுத்த முடியாது என தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசும் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாக உள்ளதால் பின்பற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு தான் தமிழகத்தில் பின்பற்றப்படும் என்றும் தமிழ்நாடு அரசு ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆளுனர் – ஆளும் கட்சி மோதல் உச்சம்; சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!