1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (13:08 IST)

இனிமேல் பள்ளி விடுமுறை கிடைக்காது: மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட தகவல்!

weatherman
தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் இனிமேல் பள்ளி விடுமுறை அதிகம் கிடைக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வந்த போதிலும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் இனிமேல் விடுமுறை கிடைக்குமென்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தென்தமிழ்நாட்டில் குமரி நெல்லை தூத்துக்குடி மற்றும் ஒரு சில மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் கொங்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அடுத்த மழை நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி ஓரிரு நாட்கள் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகலாம் என்றும் அது வலிமை குறைந்த சூறாவளி அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகலாம் என்றும் அதைப் பற்றிய முழுமையான அப்டேட் தெரிந்த பின்னர்தான் அடுத்த கட்ட மழை குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran