ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:40 IST)

இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு தான் இந்த கதி! - ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்களால் பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பலியாவோர் எண்ணிக்கையும் இங்குதான் அதிகமாக உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 69 ஆயிரத்து 59 (69,059) சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 79 ஆயிரத்து 746 பேர் காயமடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 642 பேர் பலியாகினர்.

இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் முறையே 67 ஆயிரத்து 250, 77 ஆயிரத்து 725 மற்றும் 15 ஆயிரத்து 190 ஆக இருந்தது” என்று தெரிவித்தார். நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்கள் அதிக வேகமாக செல்லுவதுதான் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். 40 முதல் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான சாலை விபத்துக்களில் மரணம் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.