1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (15:03 IST)

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
தமிழகத்தில் மழை பெய்யும் விவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆம், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
 
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.