ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் முதலிடம் பெற்ற தமிழக மாணவர்!
ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 11 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழதிய நிலையில், இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுள் அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது:
''திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 11 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள். இவர்களுள் அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.