தொடர்புடைய செய்திகள்
- காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
- கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? பள்ளிக்கல்வித்துறையை கலாய்த்த அன்புமணி
- பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்.. விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்..!
- 10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
- 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை.. முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை விவரங்கள்..!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் வகுப்பு வாரியாக தேர்வுத் தேதிகள் மற்றும் விடுமுறை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
6 முதல் 9-ஆம் வகுப்பு வரை: இந்த மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
10-ஆம் வகுப்பு: 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை தேர்வுகள் நடைபெறும்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேர்வுகள் சற்று முன்னதாகவே, அதாவது செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் காலையிலும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய வேளையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வுகள் முடிந்ததும், மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த விடுமுறை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை நீடிக்கும். இந்த விடுமுறை காலத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால், மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
