புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (13:06 IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் - முழு லிஸ்ட் இதோ!

வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முழு அறிவிப்புகள் கொண்ட விவரம் இதோ!
 
தமிழக அரசின் கடன் சுமை தற்போது ₹4.85 லட்சம் கோடியாக உள்ளது, அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக ஆதரிக்கும். 
 
காவல்துறைக்கு 9567.93 கோடி ஒதுக்கீடு.
 
தீயணைப்பு துறைக்கு 436.68 கோடி‌.
 
நீதித்துறைக்கு 1437.82 கோடி.
 
வேளாண்துறைக்கு 11982.71கோடி ஒதுக்கீடு.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு  ரூ.13,352.85 கோடி ரூபாய்  செலவு.
 
சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ₹19,420 கோடி ஒதுக்கீடு.
 
2021 -22ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை ரூ.3,979 கோடியாக குறைப்பு.
 
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
 
குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
 
நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
 
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 
நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு.