செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (17:42 IST)

7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்.. தமிழக அரசின் அரசாணை வெளியீடு..!

assembly
தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தீயணைப்பு நிலையங்கள் இருந்தாலும் இன்னும் பல இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டன என்பதும் இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து வந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஏழு இடங்கள் பின்வருமாறு:
 
▪️ கருமத்தம்பட்டி, கோவை மாவட்டம்
 
▪️ ஏரல், தூத்துக்குடி மாவட்டம்
 
▪️ மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம்
 
▪️ கோவளம், செங்கல்பட்டு மாவட்டம்
 
▪️ படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்
 
▪️ திருநெல்வேலி மாநகரம்
 
▪️ புதுவயல், சிவகங்கை மாவட்டம்
 
தமிழக அரசின் அரசாணையில் ஒரு நிலையத்திற்கு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran