செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 23 மே 2015 (11:27 IST)

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றார்

அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா, இன்று காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சராக தொண்டர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் பதவியேற்றார்.


 
 
நேற்று காலை, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக  எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது, அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுநர் ரேசைய்யாவிடம் கொடுத்தார்.
 
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர்  அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, நேற்று, மதியம் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். மேலும், புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்தார்.
 
இன்று காலை 11 மணிக்கு, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் தமிழக முதலமைச்சராக, அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா பதவியேற்றார். அவருன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 29 பேர் பதவியேற்றனர். 
 
தமிழக முதலமைச்சராக இன்று 5 வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார் என்பது குறிப்பிடதக்கது.