1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (10:40 IST)

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்… மக்களே உஷார்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்.


தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதனைத்தொடர்ந்து வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தற்போது வெளியான தகவலின் படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.