செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:43 IST)

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அனல்காற்றும் வீசுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று முதலாக தமிழகத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்ததால் சூடு தணிந்தது. அதேபோல புதுக்கோட்டையில் அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
 
இதனிடையே, 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். பெரம்பலூர் அகிய மாவட்டங்களில் இஅடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.