1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugn
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (16:57 IST)

பேஸ்புக்கில் சுவாதியின் கடைசி ஸ்டேட்டஸ் இதுதான்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஜீன் 15ஆம் தேதி கடைசியாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.


 

சுவாதி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் பேஸ்புக் பக்கத்தை போலீசார் முடக்கியுள்ளனர். அவரின் பழைய ஸ்டேட்டஸ்களை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அவரை 753 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

அதில் ஒருவர் சுவாதி போட்ட ஒரு பதிவை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்துள்ளார். அதில் “தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதையே நினைத்து வருந்திக் கொண்டே இருக்காதீர்கள்” என்று இருக்கிறது.

என்ன மன நிலையில் அவர் அதை பதிவு செய்தார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.