1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (11:11 IST)

சுவாதி கொலை வழக்கு - விஜயகாந்த் வெளியிட்ட பகீர் தகவல்

சுவாதி கொலை வழக்கு - விஜயகாந்த் வெளியிட்ட பகீர் தகவல்

சுவாதியின் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவால் தான் தமிழக காவல்துறை குற்றவாளியை கைது செய்துள்ளது என விஜயகாந்த் வெடித்துள்ளார்.
 

 
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் பிடித்து விட்டதாக கூறி,  ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதுவரை, தமிழகத்தில், எத்தனை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ளது. அதில் எல்லாம் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்துவிட்டதா? இல்லையே.
 
திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கு, காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்குகள் என்ன நிலையில் உள்ளது?
 
சுவாதியின் கொலை வழக்கிலும் நீதிமன்றத்தின் உத்தரவால் தான் தமிழக காவல்துறை இந்த வழக்கில் தீவிர காட்டியது.
 
ஒரு பெண் முதல்வராக உள்ள தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இதை நான் சொல்லவில்லை. இந்த தமிழ்நாடே சொல்லது என்று வெடித்தார்.